Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 10 ஜூலை (ஹி.ச.)
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது,
திமுக மற்றும் அதிமுக ஒரே கூட்டணி என்ற குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்டபோது,
கேட்காத விஷயத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆட்சியில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லக் கூடாத இடங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களுக்கு தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் வகையில் செயல்படுவதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
முதலமைச்சரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது, இந்த ஆட்சி எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது என்றும் கனிமொழி கூறினார்.
கரூர் சம்பவம் குறித்து பேசிய அவர்,
அது விசாரணையில் உள்ள உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால் அதுகுறித்து அதிகம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார். இருப்பினும், கரூர் சம்பவத்தின் போது மக்களோடு நின்றவர்கள் யார், மக்களுக்கு உதவி செய்தவர்கள் யார், மக்களைச் சந்திக்காமல் ஓடிப்போனவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று தெரிவித்தார்.
வெளிநாட்டிற்கு திமுகவினர் சென்றது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
தமிழக முதலமைச்சரின் முகத்தைப் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam