Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை , 10 ஜூலை (ஹி.ச)
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக் கூடாது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பொதுநல மனுக்கள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
நீதிபதிகள் கார்த்திகேயன் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அரசு பணிகள் அனைத்தும் போட்டித் தேர்வுகள் மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பது மனுதாரர்களின் முக்கிய வாதமாக உள்ளது.
கருணை அடிப்படையில் பணி வழங்குவது அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது என்றும், இது தகுதியான இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை பறிப்பதாக அமையும் என்றும் மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று கரூர் சென்று, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு நடைபெறும் அதே நாளில், அரசு பணி வழங்குவதற்கு எதிரான மனுக்களின் விசாரணையும் மதுரை அமர்வில் நடைபெறுவது கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / vidya.b