முதலமைச்சர் விஜய் இலக்கை தொழில் நிறுவனங்கள் மூலம் அடைய முயற்சி - அமைச்சர் மதன்ராஜ் பேச்சு
ராமநாதபுரம், 10 ஜூலை (ஹி.ச.) இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோராக உருவாக விரும்புபவர்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் விதத்தில் ராமநாதபுரத்தில் தமிழக சிறு குறு நடுத்தர தொழில் துறை சார்பில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கி
Minister Madhan Raja


ராமநாதபுரம், 10 ஜூலை (ஹி.ச.)

இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோராக உருவாக விரும்புபவர்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் விதத்தில் ராமநாதபுரத்தில் தமிழக சிறு குறு நடுத்தர தொழில் துறை சார்பில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் ஏராளமான தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவ குரு பிரபாகரன் தலைமை வகித்தார்.

தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் மதன்ராஜ் கலந்துகொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த தொழில் முனைவோர் அரங்குகளை பார்வையிட்டு அதனைத் தொடர்ந்து கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் மதன் ராஜா பேசுகையில்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சிறு குறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சிறு நிறுவனங்கள் தான் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது.

செயற்கை நுண்ணறிவு திறனை பயன்படுத்தி மீனவர்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உற்பத்தி திறனை பெருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க பொருளாதாரம் ஆக மாற்றும் மிக உயர்ந்த இலக்கினை நிர்ணயத்துள்ளார்.

இந்த இலக்கினை அடைய பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறு குறு நிறுவனங்களால் நிச்சயமாக நிறைவேற்ற முடியும் இவ்வாறு பேசினார்.

Hindusthan Samachar / ANANDHAN