Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 10 ஜூலை (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பொய்குணம் கிராமத்தில் தங்கராசு ரஞ்சிதம் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் வசித்து வரும் அவரது மகன் வீட்டிற்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சென்று விட்டதாக கூறப்படுகிறது, தங்கராசு என்பவரின் அக்கா வழக்கம் போல் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே அவரது தம்பியான தங்கராசக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ஏழு பவுன் தங்க நகை மற்றும் 30 ஆயிரம் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அருகில் உள்ள சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் திருக்கோவிலூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு தடயவியல் நிபுணர்கள் மர்ம நபர்களின் தடயங்கள் குறித்து சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் கடந்த ஓராண்டுக்கு முன்பு அருகில் உள்ள வீட்டில் 20 பவுன் காணாமல் போனது இதுவரை கண்டுபிடிக்காதது குறிப்பிடத்தக்கது
Hindusthan Samachar / ANANDHAN