Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 ஜூலை (ஹி.ச.)
நாட்டின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான SBI Funds Management நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்கள் வாங்கும் வகையிலான ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு (IPO) ஜூலை 14 முதல் 16 வரை நடைபெற உள்ளது.
இந்த ஐபிஓ மூலம் சுமார் ரூ.11,700 கோடி திரட்ட நிறுவனத்தின் புரமோட்டர்களான State Bank of India மற்றும் அமுண்டி (Amundi) இலக்கு நிர்ணயித்துள்ளன.
இந்த ஐபிஓவில் 20.3 கோடிக்கும் அதிகமான தக்க பங்குகள் விற்பனைக்கு வரவுள்ளன. ஒரு பங்கின் விலை ₹545 முதல் ,₹.574 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக Offer for Sale (OFS) முறையில் நடைபெறுவதால், ஐபிஓ மூலம் கிடைக்கும் தொகை நிறுவனத்துக்குச் செல்லாமல், தற்போதைய புரமோட்டர்களுக்கே கிடைக்கும்.
இந்த ஐபிஓ இந்திய பரஸ்பர நிதித் துறையில் இந்த ஆண்டின் மிகப்பெரிய பங்கு வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனால் மூலதனச் சந்தையில் முதலீட்டாளர்களின் கவனம் இந்த ஐபிஓ மீது திரும்பியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P