Enter your Email Address to subscribe to our newsletters

இந்தோனேஷியாவை பூர்வீகமாகக் கொண்ட Myristica Fragrans என்ற மரத்திலிருந்து வந்த ஜாதிக்காய் ஒரு மசாலா பொருள் ஆகும். ஜாதிக்காய் உணவிற்கு சுவையை கூட்டுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியப் பண்புகள் அதிகம் நிறைந்ததாகும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு தினமும் ஜாதிக்காய் தண்ணீர் குடித்து வந்தால் உடலுக்கு நம்ப முடியாத பல நன்மைகள் கிடைக்கும்.
ஜாதிக்காய் என்பது ஒரு மசாலா ஆகும் இது Myristica Fragrans என்ற மரத்திலிருந்து தான் வருகிறது. இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்டது ஜாதிக்காய். இது பொதுவாக இனிப்பு மற்றும் காரமான உணவுகள் பயன்படுத்தப்படுகிறது குறிப்பாக சூப்பகள், இறைச்சிகள், பானங்கள் மற்றும் பல வகையான இனிப்பு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஜாதிக்காயில் இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இதில் உடலுக்குத் தேவையான கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன. சத்துக்கள் நிறைந்த இந்த நீரைத் தொடர்ந்து குடிப்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் இவையே.
அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது.
வலி நிவாரணம்: ஜாதிக்காய் நீரின் சிறப்புப் பண்புகள் உடலில் உள்ள இரத்தத்தைச் சுத்திகரிப்பது மட்டுமல்லாமல், கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலி மற்றும் தசை வலி ஆகியவற்றின் தீவிரத்தையும் திறம்படக் குறைக்கின்றன. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புச் சேர்மங்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகின்றன. இதனால், வெளிப்புறச் சூழலிலிருந்து தாக்கும் தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுவதற்கான வலிமையை உடல் பெறுகிறது மற்றும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது.
பளபளப்பான சரும அழகு: ஜாதிக்காய் நீர் சருமப் பராமரிப்பில் அற்புதங்களைச் செய்கிறது. அதன் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் இரத்தத்தைச் சுத்திகரித்து, முகத்தில் முகப்பரு மற்றும் கறைகள் ஏற்படுவதைத் தடுக்கின்றன. மேலும், இது சருமத்தில் வயதுப் புள்ளிகள் தோன்றுவதைத் தடுக்கிறது, சுருக்கங்களைக் குறைக்கிறது, மற்றும் சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் தோற்றமளிக்கச் செய்கிறது.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV