Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)
தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான செழியன் (ஆர். செழியன்) உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.
கடந்த சில காலமாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர், தரமணியில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செழியன், தமிழ் திரைப்பட உலகில் சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் தனக்கென தனி முத்திரை பதித்தவர். கல்லூரி, பரதேசி உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அவர், டு லெட் (To Let) திரைப்படத்தை இயக்கி தேசிய அளவில் கவனம் பெற்றார். அந்தப் படத்திற்காக சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றார்.
செழியனின் மறைவு தமிழ் திரைப்படத் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், செழியனின் உடல் இன்று காலை 10 மணி முதல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் திரைப்படத் துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட உள்ளது.
பின்னர் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P