Enter your Email Address to subscribe to our newsletters

மணுகூர் , 10 ஜூலை (ஹி.ச.)
தெலங்கானா ரக்ஷண சேனா தலைவர் கல்வகுண்ட்லா கவிதா மேற்கொண்டுள்ள 2-வது கட்ட ‘பாயிபாத்’ மக்கள் தொடர்பு பயணத்தின் 2-வது நாள் நிகழ்ச்சி, மணுகூரில் பரபரப்பான சூழலில் நடைபெற்றது.
மணுகூரில் உள்ள சிங்கரேணி பி.கே. ஓ.சி.பி.-2 நிலக்கரி சுரங்கப் பகுதிக்கு சென்ற கவிதா, முதல் ஷிப்ட் பணியை முடித்து வெளியே வந்த தொழிலாளர்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை கேட்டறிய முயன்றார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் சிங்கரேணி நிர்வாகம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், சிங்கரேணி நிறுவனத்திற்கு மாநில அரசு வழங்க வேண்டிய ரூ.50 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவித்து, நிறுவனத்தின் நிதி நெருக்கடியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், சார்ந்தோர் அடிப்படையிலான வேலைவாய்ப்பு தொழிலாளர்களின் உரிமை என்றும், அதற்காக மாதத்திற்கு இருமுறை மருத்துவக் குழு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
பதிவேடுகளில் பெயர் தொடர்பான முரண்பாடுகளை சத்தியப்பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் எளிதாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சிங்கரேணியில் காலியாக உள்ள 3 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உடனடியாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் கவிதா வலியுறுத்தினார்.
மேலும், சார்ந்தோர் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து இந்த மாதம் 20-ந் தேதிக்குள் மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாவிட்டால், காந்திய வழியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவேன் என்றும் எச்சரித்தார்.
அரசு தெளிவான உறுதி அளித்தால் மட்டுமே அந்தப் போராட்டத்தை கைவிடுவேன் என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA