சாலை விபத்தில் அரசு பள்ளிகளுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்ட 3030 முட்டைகள் உடைந்து வீண்
திருவண்ணாமலை, 10 ஜூலை (ஹி.ச.) திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் முட்டையை லாரி மூலமாக கொண்டுவரப்பட்டு, பின்னர் டாட்டா ஏஸ் வாகனம் மூலம் மாநகராட்சி பகுதியில் உள
Egg


திருவண்ணாமலை, 10 ஜூலை (ஹி.ச.)

திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் முட்டையை லாரி மூலமாக கொண்டுவரப்பட்டு, பின்னர் டாட்டா ஏஸ் வாகனம் மூலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கும், அங்கன்வாடி மையங்களுக்கும் விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று லாரியில் கொண்டுவரப்பட்ட முட்டையை மாற்றி திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு வினியோகம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட இராமலிங்கனார் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் லாரி மூலமாக கொண்டு வரப்பட்ட முட்டைகளை டாட்டா ஏஸ் மூலம் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

தொடர்ந்து டாட்டா ஏஸ் வாகனத்தில் முட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் ஓட்டுனரின் கவனக்குறைவால் வளைவில் திரும்பும் போது வாகனத்தில் இருந்த முட்டைகள் சாலையில் மள மள வென கீழே சரிந்தது.

இதில் வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட முட்டைகளில் சுமார் 101 அட்டைகள் கொண்ட சுமார் 3030 முட்டைகள் சாலையில் சிதறி உடைந்தது. இதனைக் கண்ட ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனிடையே முட்டை சாலையில் சிதறியதைக் கண்ட பொது மக்கள் உடையாத முட்டைகளை தங்களது வீட்டுக்கு எடுத்து சென்றனர்.

இதனை அறிந்த வாகன ஓட்டுநர் செய்வதறியாமல் அங்கேயே வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்தார், இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN