Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)
தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினரிடம் கட்சி மாறுமாறு பேரம் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இரண்டு மருத்துவர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் (50), நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ்குமார் (51) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து, விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.
இருவரிடமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நடவடிக்கையின் போது, ரூ.56 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் விவரங்கள் மற்றும் அது வழக்குடன் தொடர்புடையதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி மாறுமாறு பேரம் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட இரு மருத்துவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam