தவெக ஆட்சியை கவிழ்க்க சதி வழக்கு- பணப் பரிமாற்றம் மூலம் சிக்கிய மேலும் 2 பேர் கைது
சென்னை, 10 ஜூலை (ஹி.ச.) தவெக ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் மேலும் இருவரை சென்னை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே நரேஷ், கார்த
கைது


சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் மேலும் இருவரை சென்னை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே நரேஷ், கார்த்திக், ரமேஷ், திருநாவுக்கரசு, தியாகராஜன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்த நிலையில், அவர்களுக்கான போலீஸ் காவல் இன்று நிறைவடைகிறது.

இதற்கிடையில், கைதானவர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் நாமக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் சேதுராஜன் ஆகிய இருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர், இருவரும் இன்று கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் தரப்பின் தகவலின்படி, கைது செய்யப்பட்ட சேதுராஜன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்றும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட கார்த்திக்கின் நண்பர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், கார்த்திக் மற்றும் சேதுராஜன் இடையே பணப் பரிமாற்றம் நடைபெற்றதற்கான தகவல்களும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மருத்துவர் ராஜசேகரிடம் இருந்து ₹56 லட்சமும், சேதுராஜனிடம் இருந்து ₹14 லட்சமும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam