கோவை அருகே இளைஞர் மீது தாக்குதல் - த.வெ.க நிர்வாகிகள் 3 பேர் கைது
கோவை, 10 ஜூலை (ஹி.ச.) கோவை பேரூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் ஹோட்டலுக்கு தமிழக வெற்றிக் கழக பிரமுகர்களான கார்த்தி, குமார் மற்றும் மதிவண்ணன் ஆகிய மூவரும் நேற்று இரவு மது போதையில் உணவருந்த வந்துள்ளனர். அப்போது, அங்கு பகுதி நேர வேலை கேட்டு
கோவை அருகே இளைஞர் மீது தாக்குதல் - த.வெ.க நிர்வாகிகள் 3 பேர் கைது


கோவை, 10 ஜூலை (ஹி.ச.)

கோவை பேரூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் ஹோட்டலுக்கு தமிழக வெற்றிக் கழக பிரமுகர்களான கார்த்தி, குமார் மற்றும் மதிவண்ணன் ஆகிய மூவரும் நேற்று இரவு மது போதையில் உணவருந்த வந்துள்ளனர்.

அப்போது, அங்கு பகுதி நேர வேலை கேட்டு வந்த இளைஞரிடம் உணவுக்கான ஆர்டரை எடுத்து வருமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இளைஞர் தான் வேலை கேட்டு வந்ததாகவும், ஹோட்டல் ஊழியர் இல்லை என்றும் கூறியபோது, ஆத்திரமடைந்த மூவரும் அவரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த இளைஞர் உடனடியாக பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மூவரும் இளைஞரை தாக்கியது உறுதியானது.

இதையடுத்து கார்த்தி, குமார், மதிவண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொது இடத்தில் மது போதையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுமா என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b