அதிமுக பெயரில் அனுமதியின்றி நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் – தலைமைக் கழகம் அறிவிப்பு
சென்னை, 11 ஜூலை (ஹி.ச.) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஒப்புதல் இன்றி, கழகத்தின் பெயரை பயன்படுத்தி எந்த நிகழ்ச்சியையும் ஒருங்கிணைக்கக் கூடாது என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து,வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
ADMK Head Quaters


சென்னை, 11 ஜூலை (ஹி.ச.)

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஒப்புதல் இன்றி, கழகத்தின் பெயரை பயன்படுத்தி எந்த நிகழ்ச்சியையும் ஒருங்கிணைக்கக் கூடாது என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து,வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏராளமான இளைஞர்கள் அதிமுகவில் இணைந்து மக்கள் பணியாற்றி வருவதாகவும், சில இளைஞர்கள் தன்னார்வ அடிப்படையில் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து கூட்டங்கள் நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கழகத்தின் பெயரில் அங்கீகாரம் பெறாத நிகழ்ச்சிகள் தொடர்பாக புகார்கள் வந்துள்ளதால், மாவட்டக் கழகங்கள் மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ அமைப்புகள் மூலமாக மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இளைஞர்களை இணைய வழியில் ஒருங்கிணைப்பதற்காக அதிமுக தொழில்நுட்ப அணி சார்பில் விரைவில் Online Membership Form அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், அதில் இணைந்து கட்சியின் அதிகாரப்பூர்வ வழிமுறைகளின் மூலம் நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரை, பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் முன்ஒப்புதல் இல்லாமல் அதிமுக பெயரில் எந்த நிகழ்ச்சியையும் ஒருங்கிணைக்க வேண்டாம் என்று தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த அறிவிப்பு பொதுச் செயலாளரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ