திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் - ஸ்ரீவாரி தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருப்பு
திருமலை , 11 ஜூலை (ஹி.ச.) திருமலை ஏழுமலையான் கோவிலில் வார இறுதியையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஸ்ரீவாரி தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொது தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய
A


திருமலை , 11 ஜூலை (ஹி.ச.)

திருமலை ஏழுமலையான் கோவிலில் வார இறுதியையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் ஸ்ரீவாரி தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொது தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை காத்திருக்கின்றனர்.

பக்தர்கள் வருகை அதிகரித்ததால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளன. மேலும், தரிசனத்திற்கான வரிசை வளாகத்தை தாண்டி வெளியே நீண்டு, பாசிகால்வா கங்கம்மா கோவில் பகுதி வரை சென்றுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, பக்தர்கள் தங்களது திருமலை பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு வருமாறு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 73,265 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 39,690 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ஸ்ரீவாரி உண்டியல் மூலம் ரூ.4.26 கோடி வருமானம் கிடைத்தது. மேலும், 4.09 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

அன்றைய தினம் சுமார் 2.98 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

திருமலையில் உள்ள மருத்துவ மையங்களில் 3,899 பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA