Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை , 11 ஜூலை (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரியும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணுக்கு இரு தோள்களிலும் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
பவன் கல்யாண் நீண்ட நாட்களாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு இரு தோள்களிலும் ‘ரோட்டேட்டர் கஃப் காயம்’ இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மும்பையில் உள்ள பிரபல கோகிலாபென் மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர்.
இதன்படி பவன் கல்யாணுக்கு இரு தோள்களிலும் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்-மந்திரி நாரா சந்திரபாபு நாயுடு, சமூக வலைதளமான ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாண்புமிகு துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் விரைவில் முழுமையான உடல்நலத்துடன் குணமடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாணின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து ஜனசேனா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA