ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மனநிலைக்கும் கொலைகாரனின் மனநிலைக்கும் ஒற்றுமை உள்ளது- சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு
அமராவதி , 11 ஜூலை (ஹி.ச.) ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் கட்சிக்குரிய எந்த பண்புகளும் இல்லை என்றும், வன்முறை மற்றும் போலி பிரசாரமே அந்த கட்சியின் முக்கிய ஆயுதங்கள் என்றும் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். ம
A


அமராவதி , 11 ஜூலை (ஹி.ச.)

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் கட்சிக்குரிய எந்த பண்புகளும் இல்லை என்றும், வன்முறை மற்றும் போலி பிரசாரமே அந்த கட்சியின் முக்கிய ஆயுதங்கள் என்றும் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

மங்களகிரியில் உள்ள தெலுங்குதேசம் கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட பின்னர்,

செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு

கூறியதாவது:-

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வரலாறு முழுவதும் ரத்தக் கறை படிந்ததாக உள்ளது. அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய பண்புகள் அந்த கட்சியில் இல்லை. வன்முறையும், போலியான பிரசாரங்களுமே அவர்களின் முக்கிய ஆயுதங்களாக உள்ளன.

கடப்பா ஸ்டீல் ஆலை அமைப்பதாக கூறி, மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

ஒரு தனிநபரின் பேராசையால் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இயற்கை வளங்கள் அழிந்துவிட்டன.

பிரம்மணி ஸ்டீல்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அரசு மீண்டும் பெற்றுள்ளது. ஓபுலாபுரம் சுரங்க விவகாரத்தில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜெகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளால் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், தொழிலதிபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலீட்டாளர்களை மிரட்டி தொழில் நிறுவனங்களை வெளியேற்றும் முயற்சிகள் நடந்தன.

சமூக வலைதளங்களை பயன்படுத்தி அரசு மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

பெண்களை அவதூறு செய்வதற்கும், மிரட்டுவதற்கும் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவது ஆபத்தானது.

இதுபோன்ற போலி பதிவுகளை கட்டுப்படுத்த சிறப்பு டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்படும்.

தெலங்கானாவில் நடந்த ஒரு கொலை சம்பவத்தை குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, அந்த கொலை செய்த நபரின் மனநிலைக்கும், ஜெகனின் அணுகுமுறைக்கும் நெருங்கிய ஒற்றுமை இருப்பதாக தெரிவித்தார்.

போக்சோ வழக்கு தொடர்பான கோபத்தில் ஒரு பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும், தனக்கு உதவாத தனது சொந்த குடும்பத்தினரையும் கொலை செய்த நபரின் மனநிலைக்கும், ஜெகன் தனது சொந்த மாமா கொலை, தாய் மற்றும் சகோதரி விவகாரங்களில் நடந்து கொண்ட விதத்திற்கும் ஒற்றுமைகள் இருப்பதாக அவர் கூறினார்.

ஆந்திராவில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்களை குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, போகாபுரம் விமான நிலையம், போலவரம் அணை மற்றும் வெளிகொண்டா திட்டங்கள் நிறைவடையும் நிலையில் இருப்பதால் எதிர்க்கட்சியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மக்களிடம் உண்மையான தகவல்களை கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும், பொய்யான பிரசாரங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA