பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – வி.ஏ.ஓ மற்றும் உதவியாளர் பணியிடை நீக்கம்
விக்கிரவாண்டி, 11 ஜூலை (H.S.) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள ஓரத்தூர் கிராமத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்
Bribe for Patta Name Transfer


விக்கிரவாண்டி, 11 ஜூலை (H.S.)

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள ஓரத்தூர் கிராமத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதே குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு உதவியாக செயல்பட்ட உதவியாளர் சாமிநாதனும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய்த்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் தொடர்பான பணிகளுக்கு சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து, உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முறைகேடு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில், இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை தொடரும் என வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b