லண்டன் புறப்பட்டார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 11 ஜூலை (ஹி.ச.) தமிழக முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், இன்று காலை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக லண்டன் புறப்பட்டுச் சென்றார்
Udhayanidhi Stalin


சென்னை, 11 ஜூலை (ஹி.ச.)

தமிழக முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், இன்று காலை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று வரும் நிலையில், அவரது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துவதற்காக இந்தப் பயணம் மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், லண்டனில் சில நாட்கள் தங்கி ஓய்வெடுப்பதுடன், அங்குள்ள சில முக்கிய சுற்றுலாத் தலங்களையும் பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் லண்டனில் இருந்து துபாய் வழியாக சென்னை திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலினை திமுக மூத்த நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் தொண்டர்கள் சந்தித்து வழியனுப்பி வைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN