கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு- வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்,வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
கோவை, 11 ஜூலை (ஹி.ச.) கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தாரணிகா மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக
வானதி


கோவை, 11 ஜூலை (ஹி.ச.)

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தாரணிகா மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில்,

மாணவிக்கு ஏற்கனவே உடல்நலக் குறைபாடு இருந்ததாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், தங்களது மகள் நல்ல உடல்நலத்துடன் இருந்ததாக அவரது பெற்றோர் கூறுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, காவல்துறை வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொண்டு, மாணவியின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிரிழந்த மாணவி தாரணிகாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P