Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூலை (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் கொரோனா தொற்றால் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டில் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது கோவிட்-19 பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தினசரி பாதிப்புகள் மிகக் குறைவாகவே பதிவாகி வருவதாகவும் சுகாதாரத்துறை விளக்கியுள்ளது.
மாநிலத்தில் தற்போது எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இணைநோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் காய்ச்சல் அல்லது சளி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் சூழ்நிலைகளில் அரசு பரிசோதனைகளை தீவிரப்படுத்தி வருகிறது என்றும், தற்போதைய கொரோனா பாதிப்பு வீரியம் குறைந்ததாக இருப்பதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் அருகிலுள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுமாறும் தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ