மீண்டும் சரிவை நோக்கி செல்லும் தங்கம் விலை - நகை பிரியர்களுக்கு உற்சாகம்
சென்னை, 11 ஜூலை (ஹி.ச.) ஜூன் மாதம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை ஜூலை மாத முதல் நாளில் அதிரடியாக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்கள் காலை மாலை என இரு வேளையிலும் தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கட
தங்கம்


சென்னை, 11 ஜூலை (ஹி.ச.)

ஜூன் மாதம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை ஜூலை மாத முதல் நாளில் அதிரடியாக குறைந்தது.

இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்கள் காலை மாலை என இரு வேளையிலும் தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 8 மற்றும் 9ஆம் தேதிகளில் காலை மாலை என 2 வேளைகளிலுமே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.

இதனை தொடர்ந்து நேற்று ஜுலை 10ஆம் தேதி தங்கம் விலை கணிசமாக அதிகரித்தது.

அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,350க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,300க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.240க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P