Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூலை (ஹி.ச.)
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், சீலிங் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் வழியாக தண்ணீர் ஒழுகுவதாகவும் நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சேதமடைந்த சீலிங்கின் மீதமுள்ள பகுதி எப்போது கீழே விழுமோ என்ற அச்சத்துடன் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தண்ணீர் ஒழுகும் பகுதியில் நோயாளிகள் சிகிச்சை பெறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த கட்டிடம், கடந்த 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகமாக கட்டப்பட்டு, அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கால் திறந்து வைக்கப்பட்டது. பின்னர், 2014-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
சீலிங் சேதம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ