Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூலை (ஹி.ச)
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 757 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, சட்டப்பிரிவு 46(1)-ன் கீழ் உள்ள 673 திருக்கோவில்களுக்கும், சட்டப்பிரிவு 46(2)-ன் கீழ் உள்ள 84 திருக்கோவில்களுக்கும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அறங்காவலர் நியமன அறிவிப்பு, திருக்கோவில்களின் பட்டியல், தகுதிகள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை அறநிலையத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் இணைய வழியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது விரைவஞ்சல் (Speed Post) மூலமாகவோ அனுப்பலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12.08.2026 மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை சென்றடைய வேண்டும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கு முன்பாக சட்டப்பிரிவு 46(3)-ன் கீழ் உள்ள 220 திருக்கோவில்களுக்கும், நிர்வாகத் திட்டம் உள்ள 35 திருக்கோவில்களுக்கும் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் மற்றும் 14 மாவட்டங்களுக்கான மாவட்டக் குழு உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ