அணுக்கனிம சுரங்கத் திட்டம் குறித்து விரைவில் நல்ல முடிவு – அமைச்சர் ராஜேஷ்குமார்
கன்னியாகுமரி, 11 ஜூலை (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட சுவாமிநாதபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதி அனுபவ அங்காடியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் குத்த
ராஜேஷ்


கன்னியாகுமரி, 11 ஜூலை (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட சுவாமிநாதபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதி அனுபவ அங்காடியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தற்போது 48 மதி அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் தனித்துவமான பொருட்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேஷ்குமார்,

கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் Indian Rare Earths Limited நிறுவனத்தின் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

அப்போது, அணுக்கனிம சுரங்கத் திட்டம் குறித்த விவகாரம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், மக்களை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அரசு கொண்டு வராது. இதுகுறித்து முதலமைச்சர் எங்களுக்கு உறுதியளித்துள்ளார் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P