சபரிமலையில் விடுதி அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் - தேவஸ்தான தலைவர் தகவல்
திருவனந்தபுரம் , 11 ஜூலை (ஹி.ச.) இந்த ஆண்டு மண்டல–மகரவிளக்கு சீசன் வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில், பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்குமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் உத்தர
A


திருவனந்தபுரம் , 11 ஜூலை (ஹி.ச.)

இந்த ஆண்டு மண்டல–மகரவிளக்கு சீசன் வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில், பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்குமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

சபரிமலையில் அனைத்து சேவைகளும் படிப்படியாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.

இதன் ஒரு பகுதியாக, சபரிமலையில் உள்ள அனைத்து விடுதி அறைகளையும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.

இதுவரை சுமார் 190 அறைகள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு வசதியில் இருந்த நிலையில், இனி கூடுதல் அறைகளும் அந்த வசதியில் சேர்க்கப்படும்.

மண்டல–மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தங்குமிடம், குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டு, யாத்திரை சிரமமின்றி நடைபெற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், இனிமேல் அய்யப்ப சங்கமம் நடத்தப்படாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA