Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூலை (ஹி.ச.)
பாஜகவை எதிர்க்கும் நோக்கில் திமுகவும், தவெகவும் ஒரே அணியில் இணைய வேண்டும் என்ற விசிக தலைவர் திருமாவளவனின் கருத்து தொலைநோக்குப் பார்வை கொண்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நீட் விவகாரத்தில் தொடர்ந்து மாணவர்கள் உயிரிழப்பது வேதனையளிக்கிறது. மத்திய கல்வித்துறை அமைச்சர் பொறுப்பற்ற பதில்களையும் அர்த்தமற்ற விளக்கங்களையும் அளித்து வருகிறார்.
நீட் தேர்வில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. தமிழகத்தில் நீட் தேர்வால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளிப்படையான, நேர்மையான தேர்வு முறை தேவை என்றார்.
கர்நாடகா - தமிழ்நாடு காவிரி விவகாரம் குறித்து பேசிய அவர், இது இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினை. தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் குறை கூறாமல் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், பாஜக எதிர்ப்பில் ஏன் திமுகவும், தவெகவும் ஒரே அணியில் இருக்கக் கூடாது? என்ற திருமாவளவனின் கருத்து குறித்து கேட்கப்பட்டபோது, அது தொலைநோக்குப் பார்வையுடன் கூறப்பட்ட அரசியல் கருத்து.
தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். கேரளத்தில் இருப்பதைப் போல, பாஜகவை எதிர்க்க திமுகவும், தவெகவும் தயாராக வேண்டும் என்பதையே திருமாவளவன் வலியுறுத்துகிறார் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ