Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 11 ஜூலை (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகேஎல்லபாளையம் பகுதியில் ஒரு வீட்டின் முன்புறம் அமைந்திருந்த மின்மாற்றியில் ஆயில் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரியத்திற்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மின்வாரிய ஊழியர்கள், முதலில் மின்சார விநியோகத்தை நிறுத்தினர். பின்னர் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ சிறிது நேரத்தில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்படவில்லை. இருப்பினும், பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் சிறிது நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
மின்மாற்றியில் ஆயில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P