டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடெல்லி , 11 ஜூலை (ஹி.ச.) டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, டெல்லி செங்
A


புதுடெல்லி , 11 ஜூலை (ஹி.ச.)

டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, டெல்லி செங்கோட்டையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து மும்பை போலீசார் உடனடியாக இந்த தகவலை டெல்லி போலீசாருக்கு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து டெல்லி போலீசார் உஷார்படுத்தப்பட்டு, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் செங்கோட்டை வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என போலீசார் தெரிவித்தனர்.

இருப்பினும், மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொலைபேசி அழைப்பின் பின்னணி குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீப காலமாக இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் இல்லாத நிலையில், மீண்டும் செங்கோட்டைக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA