Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 11 ஜூலை (ஹி.ச.)
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் உத்தரவின் பேரில், பழனி அடிவாரத்தில் உள்ள சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான அறநிலையத் துறை சொத்தை தனிநபர்கள் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், அந்தப் பதிவை ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்வதுடன், அந்தப் பதிவை மேற்கொண்ட அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பத்திரப்பதிவுத்துறை தலைவர், மதுரை மண்டல பதிவுத்துறை துணைத்தலைவர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் ஆகியோருக்கு அனைத்து ஆவணங்களுடன் கூடிய விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், தகுதியற்ற ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பத்திரப்பதிவு மேற்கொண்டதாகக் கூறப்படும் சார்பதிவாளர், கிரையம் எழுதிக்கொடுத்தவர் மற்றும் சொத்தை வாங்கியவர்கள் உள்ளிட்டோர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam