புதுச்சேரியில் மேடையிலேயே அரசியல் வார்த்தைப் போர் -அன்பழகனுக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
புதுச்சேரி, 11 ஜூலை (ஹி.ச.) புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியில் உள்ள அமலோற்பவம் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட பிக்கில்பால் மைதானம் திறப்பு விழா மற்றும் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நீர்வள
புஸ்ஸி


புதுச்சேரி, 11 ஜூலை (ஹி.ச.)

புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியில் உள்ள அமலோற்பவம் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட பிக்கில்பால் மைதானம் திறப்பு விழா மற்றும் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் அதிமுகவைச் சேர்ந்த உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகருமான அன்பழகன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அன்பழகன்,

ஒவ்வொரு கட்சிக்கும் தனித்துவம் உள்ளது. அந்தக் கட்சியின் மீது தொண்டர்கள் விசுவாசம் வைத்துள்ளனர். எனவே, வேறு கட்சியில் இருப்பவர்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று தெரிவித்தார்.

இந்தக் கருத்து தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாக விமர்சிப்பதாக பார்க்கப்பட்டது.

இதையடுத்து பேசிய அமைச்சர் ஆனந்த்,

கட்சியில் இருப்பவர்களை நீங்கள் ஒழுங்காக வைத்திருந்தால் அவர்கள் ஏன் வேறு கட்சிக்கு வர வேண்டும்? நீங்கள் சரியாக நடத்தாததால்தான் எந்த இடம் நல்ல இடம், எந்த இடத்தில் ஊழல் இல்லை என்பதை உணர்ந்து அவர்கள் எங்களிடம் வருகின்றனர் என்று பதிலடி கொடுத்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P