Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 11 ஜூலை (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாட்டில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் விண்ணப்பம் பெற லஞ்சம் பெற்று வருவதாக புகார்கள் எழுந்தன.
இப்புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் நேற்று காலை முதல் மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
விடிய விடிய நடைபெற்ற இச்சோதனையில் அலுவலகத்தின் முக்கிய ஆவணங்கள், கோப்புகள் மற்றும் அலுவலர்களின் இருக்கைகள் உள்ளிட்டவை முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த 6.14 லட்சம் ரூபாய் பணம் கண்டெடுக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பணம் குறித்து அலுவலக ஊழியர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பணம் விவசாயிகளுக்கான மானியம் அல்லது திட்டப் பணிகளுக்காக லஞ்சமாக பெறப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வேளாண் அலுவலகத்தில் நடந்த இந்த சோதனை சம்பவம் ஓரத்தநாடு பகுதி விவசாயிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b