மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 செஸ்? – அரசுக்கு கருத்துரு அனுப்பிய வணிகவரித்துறை
சென்னை, 11 ஜூலை (ஹி.ச) மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 செஸ் வரி வசூலிப்பது தொடர்பாக வணிகவரித்துறை அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) சட்ட விதிகளில்
High court


சென்னை, 11 ஜூலை (ஹி.ச)

மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 செஸ் வரி வசூலிப்பது தொடர்பாக வணிகவரித்துறை அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) சட்ட விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் தற்போது தனியாக வசூலிக்கப்படும் ரூ.10 தொகையை, பாட்டிலின் விலையுடன் சேர்த்து வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் தெரிவித்துள்ளது.

அதேபோல், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுதல் மற்றும் அவற்றை மறுசுழற்சி செய்வது உள்ளிட்ட பொறுப்புகளை சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமே ஒப்படைக்கவும் அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ