விஜயை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை – முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்
சென்னை , 11 ஜூலை (ஹி.ச.) சென்னையில் மாவீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்
Minister Rajakannappan


சென்னை , 11 ஜூலை (ஹி.ச.)

சென்னையில் மாவீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்,

அழகுமுத்துக்கோனுக்கு மணிமண்டபம் மற்றும் சிலைகள் உள்ளிட்ட பல்வேறு நினைவுச் சின்னங்கள் திமுக ஆட்சியிலேயே அமைக்கப்பட்டதாகவும், அப்போது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

கரூரில் நேற்று விஜய் ஆற்றிய பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

நாங்கள் இங்கு அழகுமுத்துக்கோன் பிறந்தநாளில் மரியாதை செலுத்துவதற்காக வந்துள்ளோம். விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

விஜயை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. எனவே, அவரைப் பற்றி பேச விரும்பவில்லை என்றார்.

மேலும், பாஜகவை எதிர்க்க திமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டபோது,

அவர் தனது கருத்தை கூறியிருக்கிறார்.

எங்களைப் பொறுத்தவரை திமுக, திமுகதான் என்று

பதிலளித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P