இன்று உலக மக்கள் தொகை தினம் - சென்னையில் மருத்துவத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
சென்னை, 11 ஜூலை (ஹி.ச) உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னையில் இன்று மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்காவில் உலக மக்கள் தொகை தின உற
இன்று உலக மக்கள் தொகை தினம் - சென்னையில் மருத்துவத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி


சென்னை, 11 ஜூலை (ஹி.ச)

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னையில் இன்று மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்காவில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவத்துறை அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. இந்த பேரணியை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பிரபாகர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் சவால்கள், குடும்ப நல திட்டத்தின் அவசியம் மற்றும் கருத்தடை முறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் பங்கேற்றோர் ஏந்திச் சென்றனர்.

தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி, முக்கிய சாலைகள் வழியாக சென்று டிஎம்எஸ் வளாகத்தில் நிறைவடைந்தது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சி மற்றும் தனிநபர் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்த பேரணி அமைந்திருந்தது.

Hindusthan Samachar / vidya.b