கேள்வி கேட்கும் குரல்களை யாராலும் தடுக்க முடியாது - நடிகர் பிரகாஷ் ராஜ்...!
ஆந்திரா , 12 ஜூலை (ஹி.ச.) நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வரும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் பதிலடி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெ
A


ஆந்திரா , 12 ஜூலை (ஹி.ச.)

நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வரும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் பதிலடி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், நான் அமைதியாக இல்லை. நடப்பவை அனைத்தையும் கவனித்து வருகிறேன்.

மேலும், சில அரசியல் பிரமுகர்களின் ஆதரவாளர்கள், சில ஊடகங்கள் மற்றும் யூடியூபர்கள் தன்னை குறிவைத்து பொய்யான தகவல்கள், கற்பனை கதைகள் மற்றும் அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறது.

“இன்னும் கீழே இறங்குங்கள்” என்னை விமர்சிப்பவர்களின் செயல்பாடுகளை உலகம் கவனித்து வருகிறது.

எவ்வளவு முயன்றாலும் கேள்வி கேட்கும் குரல்களை யாராலும் அடக்க முடியாது.

எனது கருத்துகளை தொடர்ந்து வெளிப்படுத்துவேன்.

இவ்வாறு நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA