Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஜூலை (ஹி.ச.)
பின்னணி பாடகி எஸ். ஜானகியின் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தள பதிவில்,
திரையுலகின் பேராளுமைகளுள் ஒருவரான பின்னணி பாடகர் ஜானகி அம்மாளின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. வயது மூப்பின் விளைவு என்றாலும், அவர் இன்று நம்மிடையே இல்லை என்பது வெறுமை உணர்வைத் தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இசை உலகில் அவரது சாதனைகள் பெருவியப்பை ஏற்படுத்துகின்றன. 48,000 பாடல்கள், 20 மொழிகளில் பாடியிருப்பதும், நான்கு தேசிய விருதுகளைப் பெற்றிருப்பதும் பெருமைக்குரியது. அவரது குரல் நம் ஒவ்வொருவரின் செவிக்கும் பேரானந்தம் வழங்கிய சிறப்புக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அவரது மறைவு திரையுலகுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என திருமாவளவன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P