கரூரில் விமான நிலையம், ஒருங்கிணைந்த உலர் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை – அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஜோதிமணி கடிதம்
சென்னை, 12 ஜூலை (ஹி.ச) கரூர் மாவட்டத்தின் நீண்டகால கோரிக்கையான கிரீன்ஃபீல்டு (Greenfield) விமான நிலையம் மற்றும் ஒருங்கிணைந்த உலர் துறைமுகம் (Integrated Dry Port) அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு கரூர் நா
Jothimani


சென்னை, 12 ஜூலை (ஹி.ச)

கரூர் மாவட்டத்தின் நீண்டகால கோரிக்கையான கிரீன்ஃபீல்டு (Greenfield) விமான நிலையம் மற்றும் ஒருங்கிணைந்த உலர் துறைமுகம்

(Integrated Dry Port) அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

இத்திட்டம் தொடர்பாக ஏற்கனவே மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளதாகவும், மாநில அரசின் பரிந்துரையை மத்திய அரசு கோரியுள்ள நிலையில், தமிழக அரசு விரைந்து தனது பரிந்துரையை அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சாத்தியக்கூறு ஆய்வு, நில அளவீடு உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கி, மத்திய அரசிடம் முழுமையான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரூர் தமிழ்நாட்டின் ஜவுளித் தலைநகரம் என்பதால், விமான நிலையம் மற்றும் உலர் துறைமுகம் அமைந்தால் ஏற்றுமதித் துறை, தொழில், வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறைகளில் மாவட்டம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடையும் என்றும் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியத் திட்டத்தை விரைவில் பரிசீலித்து, மாநில அரசின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் கீர்த்தனாவை ஜோதிமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ