வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் – ஓ. பன்னீர்செல்வம்
சென்னை, 12 ஜூலை (ஹி.ச) தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி மிகுந்த துயரத்தையும் மனவேதனையையும் அளித்துள்ளதாக முன்னாள் ம
Ops


சென்னை, 12 ஜூலை (ஹி.ச)

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி மிகுந்த துயரத்தையும் மனவேதனையையும் அளித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

படகு விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தோரின் உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வருவதற்கும், விபத்தில் மீட்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ