ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஜீப் கவிழ்ந்து விபத்து - பெண் உட்பட 3 பேர் பலி
விருதுநகர், 12 ஜூலை (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் ஜீப் (பொலிரோ) கவிழ்ந்து ஏற்பட்ட சாலை விபத்தில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஜீப் ஓட்டுநர் பூபதி, கார்த்திக் மற்றும் அங்காளஈஸ்வ
விபத்து


விருதுநகர், 12 ஜூலை (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் ஜீப் (பொலிரோ) கவிழ்ந்து ஏற்பட்ட சாலை விபத்தில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஜீப் ஓட்டுநர் பூபதி, கார்த்திக் மற்றும் அங்காளஈஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சேர்வை, அவரது மனைவி வீரலட்சுமி, மகள்கள் காவ்யா, தனலட்சுமி, மகன் அஸ்வின் மற்றும் உறவினர் லட்சுமி உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வதிராயிருப்பைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் கல்லிப்பட்டி அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam