திருப்பதியில் இருந்து லாரியில் 22 கிலோ கஞ்சா கடத்தல் - இருவர் கைது
சென்னை, 13 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க போதை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்குடன் காவல்துறை மற்றும் அரசு தீவிர அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மாநிலம் மு
திருப்பதியில் இருந்து லாரியில் 22 கிலோ கஞ்சா கடத்தல் - இருவர் கைது


சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க போதை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்குடன் காவல்துறை மற்றும் அரசு தீவிர அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மாநிலம் முழுவதும் 65 சிறப்பு போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் திருப்பதியில் இருந்து சென்னைக்கு லாரி மூலம் கஞ்சா கடத்தல்

ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவ்வழக்கில் சேதுராமன், ராஜேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் பெரியமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கடத்தலுக்கு பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, எங்கிருந்து கஞ்சா கொள்முதல் செய்யப்பட்டது, யாருக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b