Enter your Email Address to subscribe to our newsletters

நாகப்பட்டினம், 13 ஜூலை (ஹி.ச.)
நாகை கடற்கரை சாலை பகுதியில் மீன்பிடி படகுகளுக்காக அரசு மானிய விலையில் வழங்கப்படும் டீசலை முறைகேடாக பெற்று, அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் முயற்சி நடந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து நாகை கடற்கரை சாலை பகுதியில் போலீசார் நேற்று இரவு நடத்திய திடீர் சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9,000 லிட்டர் டீசல் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிலம்பு செல்வம், எரிசப்பன், ரமேஷ் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சரத் முரளி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனவர்களின் நலனுக்காக வழங்கப்படும் மானிய டீசலை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட காவல்துறைசார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இது போன்ற கள்ளச் சந்தை விற்பனையை தடுக்க கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b