Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 13 ஜூலை (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரத்து 130 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 13 லட்சமாக பதிவாகியுள்ளது.
திருமலைக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.
குறிப்பாக விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், சிலாதோரணம் வரை வெளிப்புற வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். எஸ்.எஸ்.டி. டோக்கன் இல்லாத சர்வதரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நேற்றைய நிலவரப்படி, 38 ஆயிரத்து 75 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். மேலும், 4 லட்சத்து 24 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
அன்னபிரசாதம் 3 லட்சத்து 11 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மருத்துவ சேவைகளை 4 ஆயிரத்து 104 பக்தர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA