போலவரம் திட்டத்தை ஹெலிகாப்டரில் பார்வையிட்டார் - முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஏலூரு, 13 ஜூலை (ஹி.ச.) ஆந்திர மாநிலத்தின் முக்கிய நீர்ப்பாசனத் திட்டமான போலவரம் திட்டப் பணிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். ஏலூரு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ஹெலிகாப்டர் மூலம் போலவரம் திட்டப் பகுதியை வான்வழிய
A


ஏலூரு, 13 ஜூலை (ஹி.ச.)

ஆந்திர மாநிலத்தின் முக்கிய நீர்ப்பாசனத் திட்டமான போலவரம் திட்டப் பணிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.

ஏலூரு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ஹெலிகாப்டர் மூலம் போலவரம் திட்டப் பகுதியை வான்வழியாக பார்வையிட்டார்.

அப்போது ஸ்பில்வே பகுதி, கோதாவரி ஆற்றின் நீர்வரத்து நிலை, மேல் மற்றும் கீழ் காஃபர் அணைகளுக்கு இடையே நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, திட்டப் பகுதிக்கு நேரில் சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு, எர்த் கம் ராக் ஃபில் அணை (ECRF) பகுதியில் நடைபெற்று வரும் கேப்-1 மற்றும் கேப்-2 பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், கட்டப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையப் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

போலவரம் திட்டத்தின் தற்போதைய நிலை, பணிகளின் முன்னேற்றம் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முதல்வருக்கு விளக்கம் அளித்தனர்.

இந்த ஆய்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் நிம்மல ராமநாயுடு மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படும் போலவரம் திட்டப் பணிகளை விரைவுபடுத்த அரசு தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், முதல்வரின் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA