நான் ஒரு இந்து என்றாலும் அனைவருக்கும் சமமானவன் -அண்ணாமலை பேச்சு!
பொள்ளாச்சி, 13 ஜூலை (ஹி.ச.) கோவையில் இன்று நடந்த மாநாட்டில் பேசிய அண்ணாமலை, பா.ஜ.க வில் இருந்து விலகியது தொடர்பாகவும் பேசி உள்ளார். ஏன் பா.ஜ.க வில் இருந்து விலகினேன் என்பது குறித்து பேசிய அண்ணாமலை, மக்களுக்கு நல்லது செய்ய வேறு ஒரு வழியை தேர்வு ச
A


பொள்ளாச்சி, 13 ஜூலை (ஹி.ச.)

கோவையில் இன்று நடந்த மாநாட்டில் பேசிய அண்ணாமலை, பா.ஜ.க வில் இருந்து விலகியது தொடர்பாகவும் பேசி உள்ளார்.

ஏன் பா.ஜ.க வில் இருந்து விலகினேன் என்பது குறித்து பேசிய அண்ணாமலை, மக்களுக்கு நல்லது செய்ய வேறு ஒரு வழியை தேர்வு செய்து உள்ளதாக கூறினார்.

மேலும், தான் இந்து என்றாலும் அனைவருக்கும் சமமானவன் என்றும் அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க வில் இருந்து விலகி உள்ள அண்ணாமலை, இப்போது புதிதாக வீ தி லீடர்ஸ் இயக்கத்தை ஆரம்பித்து உள்ளார்.

இந்த இயக்கத்தின் மாநாடு கோவை பொள்ளாச்சியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசிய அண்ணாமலை, பா.ஜ.க குறித்தும் மதம் தொடர்பாகவும் சில கருத்துகளை குறிப்பிட்டார்.

தான் பா.ஜ.க வில் இருந்தேன். இந்த இயக்கத்திற்கு பா.ஜ.க வில் இருந்து பலரும் வந்து உள்ளனர். பா.ஜ.க மட்டுமின்றி தி.மு.க, அ.தி.மு.க வில் இருந்தும் வந்து உள்ளனர்.

பா.ஜ.க வில் இருந்து விலகியது குறித்து நான் இங்கு பேச விரும்புகிறேன்.

இதுவரை அது பற்றி நான் எங்கும் பேசியதில்லை.

பா.ஜ.க மீது எனக்கு கோபம் இருந்ததா ? ஆம் இருந்தது. ஆனால், அதை பொறுப்புணர்ச்சி உடன் காட்ட வேண்டி இருந்தது.

பா.ஜ.க வில் இருந்து விலகிய பிறகும் யாரை பற்றியும் 38 நாட்கள் தவறாக பேசவில்லை. அப்போது தி.மு.க வை சேர்ந்தவர்கள் நான் பா.ஜ.க வின் பீ டீம் என்றனர்.

வெளியே வந்து பா.ஜ.க பற்றி திட்டினால் தானே வருவார்கள் என்று சிலர் சொன்னார்கள்.

ஆனால், நான் பழிச்சொல் சொல்லி விட்டு வெளியே வர மாட்டேன். எங்களுக்கு இன்னொரு பாதை இருக்கிறது. அதில் சென்று மக்களுக்கு நல்லது செய்வோம்,அவ்வளவு தான்.

இப்போது அடுத்த கேள்வி. அண்ணாமலை ஒரு தேசியவாதியா? இறுமாப்புடன் சொல்வேன் ஆம் தேசியவாதி தான். இந்தியானா ? தமிழனா ? எதற்கு இதில் சிக்கல். எப்போதும் இந்தியன் என்பதில் கர்வம். அந்த இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வர வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம்.

இன்றும் நான் சொல்கிறேன். எனது மதம் இந்து மதம். திருநீறு வைக்கிறேன். குங்குமம் வைக்கிறேன். ஆனால், வீட்டில் இருந்து வெளியே வரும் போதே எனது மதத்தையும் சாதியையும் வீட்டிலேயே பூட்டி வைத்து விடுவேன். அனைவருக்கும் பொதுவான நபராகவே நான் உங்கள் முன்பு நிற்கிறேன்.

மதத்தை ஒவ்வொரு முறையும் தூக்கி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான இந்து அனைவரையும் சமமாக பார்ப்பான்.

அனைவரையும் சமமாகவே நடத்துவான் என்றார்.

Hindusthan Samachar / Durai.J