மதுரை கொட்டாம்பட்டி அருகே ஆம்னி பஸ் -அரசு பஸ் மீது மோதி கோர விபத்து- 5 பேர் பலி,42 பேர் படுகாயம்..!
மதுரை, 13 ஜூலை (ஹி.ச.) இன்று அதிகாலை (ஜூலை 13, 2026) சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில்கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த அரசுப் பேருந்தி
ம


மதுரை, 13 ஜூலை (ஹி.ச.)

இன்று அதிகாலை (ஜூலை 13, 2026) சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில்கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த அரசுப் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் மற்றும் 42 பேர் காயமடைந்துள்ளனர்

இந்த விபத்தில் 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காயமடைந்த 42 நபர்களும் உடனடியாக மீட்கப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் தீவிர சிகிச்சைக்காக அவர்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு சரக டிஐஜி அபினவ் குமார் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, விபத்துக்கான காரணம் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / Durai.J