வேலை நாட்களிலும் குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
தென்காசி, 13 ஜூலை (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளமான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே வேலை நாட்களால் என்ற போதிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, தற்போது மழைக்கால சீசன் ஆனது
Courtallam Falls


தென்காசி, 13 ஜூலை (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளமான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே வேலை நாட்களால் என்ற போதிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தற்போது மழைக்கால சீசன் ஆனது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் மழை இல்லை என்றாலும் அருவிகளில் தண்ணீரானது குறைந்த அளவு கொட்டி வருகிறது.

இந்த நிலையில், குறைந்த அளவு கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது வருகை தந்து குற்றால அருவிகளில் குளித்து வரும் நிலையில், வேலை நாட்கள் என்ற போதிலும் குற்றாலம் பகுதியிலுள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது கணிசமாக அதிகரித்து காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN