முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு புகார் - பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு
சென்னை, 13 ஜூலை (ஹி.ச.) திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு தொடர்பாக பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் அலுவலக பயன்பாட்டிற்காக 6 மாத காலத்திற்கு வாடகை ஒப்பந்தத்தி
Dhamo


சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)

திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு தொடர்பாக பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2024 மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் அலுவலக பயன்பாட்டிற்காக 6 மாத காலத்திற்கு வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்பட்ட நிலத்தை, ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்காமல் அபகரிக்க முயற்சி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், நிலத்தின் உரிமையாளர் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒப்பந்த ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ