Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூலை ( ஹி.ச)
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அமைந்துள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நேற்று இரவு 11 மணிக்கு மேல் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மைதானத்திற்குள் நுழைந்துள்ளனர்.
இவர்கள் அங்கு கூச்சலிட்டும், ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டும் அமைதியை குலைத்ததாக விடுதியில் தங்கியுள்ள மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனை வளாகம் என்பதால் 24 மணி நேரமும் நோயாளிகள், பணியாளர்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரிகள், போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் கல்லூரி வளாகத்தின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும், வெளிநபர்கள் அனுமதியின்றி நுழைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b