தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது!
சென்னை, 13 ஜூலை (ஹி.ச.) அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், 2026–27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின
கலந்தாய்வு


சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், 2026–27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

முதற்கட்டமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.

இன்று காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை, மாணவர்கள் தங்களின் விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யலாம்.

இதற்கான தற்காலிக இடஒதுக்கீட்டு ஆணைகள் நாளை (ஜூலை 14) காலை 7.00 மணிக்கு வெளியிடப்படும். மாணவர்கள் அதனை மாலை 5.00 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர், ஜூலை 15 காலை 7.00 மணிக்கு இறுதி இடஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும்.

இதையடுத்து, பொதுப்பிரிவில் சிறப்புப் பிரிவுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வும் தொடங்க உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam