Enter your Email Address to subscribe to our newsletters

சேலம் , 13 ஜூலை (ஹி.ச.)
காளான் சாகுபடி என்பது குறைந்த முதலீட்டில், குறுகிய காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய ஒரு சிறந்த சுயதொழில் ஆகும். விவசாயக் கழிவுகளான வைக்கோல், கரும்புச்சக்கை போன்றவற்றை முதன்மை மூலப்பொருளாகக் கொண்டு இதை எளிதாகச் செய்யலாம்.
எனவே சேலம் மாவட்டம் சந்தியூரில் இயங்கிவரும் தமிழக அரசின் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் ஜூலை 15-ஆம் தேதி காளான் சாகுபடி குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறைந்த முதலீட்டில் கூடுதல் வருமானம் தரும் காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள், தேவையான மூலப்பொருட்கள், பராமரிப்பு முறைகள், அறுவடை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த நேரடி செயல்முறை விளக்கங்கள் பயிற்சியில் இடம்பெறும். பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் முன்பதிவு செய்யும் முதல் 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என வேளாண் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.
எனவே பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் உடனடியாக முன்பதிவு செய்துகொள்ளுமாறு வேளாண் அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கும், முன்பதிவுக்கும் 90955 13102 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b